சமீப காலமாக இந்தியாவில் ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ண்ணம் உள்ளது.
இதற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பும் ஒருகாரணம். தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்களின் வருகையும் தொழில்நுட்பம் பயன்பாடும் இளைஞர்களை வேலை தேடுபவர்கள் அல்லாமல் தொழிலபதிபர்களாக உருவாக்கி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே பெரிய ஹோட்டல்களில், உணவகங்கள், ரெஸ்டாரெண்டுகளில் வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்வதைப் போல் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கையேந்தி பவன், சாலையோரக் கடைகளுக்கும் ஆன்லைன் டெலிவரி வசதிக்கு ஏற்பாடும் செய்ய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.