ஆன்லைன் வகுப்பு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (19:08 IST)
தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலை தொற்று பரவி வருவதால்  தமிழகப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை மட்டும் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆன்லைன் வழி பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பள்ளிகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஆன்லைன் வகுப்பில் ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணியமான உடை அணிந்திருக்க வேண்டும். மாணவர்கள் புகார் அளிக்கும் விதத்தில் அந்தந்தப் பள்ளிகளில் புகார் பெட்டிகளில் வைக்கப்பட வேண்டும். 

ஒவ்வொரு ஆன்லைன் வகுப்பு நடக்கும்போதும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.  ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அளவிலான பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்படும் . அந்தக் குழுவில் பள்ளி முதல்வர்,  2 ஆசிரியர்கள், பெற்றோர்,  2 நிர்வாகிகள் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்