நிசர்கா... அரபிக்கடலில் உருவாகும் அடுத்த புயல்!!

திங்கள், 1 ஜூன் 2020 (10:12 IST)
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தகவல். 
 
தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் என கூறியிருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று முதலே துவங்கியது. இதனால் கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த புயல் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாம். 
 
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால்,  நிசர்கா என்று அழைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்