போலீஸாருடன் வாக்குவாதம் செய்த மேலும் ஒரு வழக்கறிஞர்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:58 IST)
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஜா ராஜன் என்ற பெண் வழக்கறிஞர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கறிஞர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது
 
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு பத்மநாபன் தியேட்டர் அருகில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தி வந்தனர். சோதனையின்போது தாறுமாறாக காரை ஓட்டி வந்த வழக்கறிஞர் விஸ்வநாதன் என்பவர் போலீசாருடன் தகராறு செய்துள்ளார்
 
குடிபோதையில் காரை ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்த கொத்தவால்சாவடி போலீசார், காரை பறிமுதல் செய்தனர். மேலும் மாஸ்க் அணியாமல் போதையில் வந்த விஸ்வநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றி போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்