தமிழ் கற்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (15:10 IST)
தமிழ் கற்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு!
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் கற்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு செய்துள்ளது
 
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தமிழை வளர்க்கவும் வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்கவும் தமிழ் வளர்ச்சித் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது இதனை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர் 
 
தமிழகத்தில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழர்கள் அங்கு உள்ள மொழிகளை மட்டுமே கற்று தமிழை கிட்டத்தட்ட மறந்து விடுகின்றனர் என்றும் இதனால் தமிழ் பரப்புரை கழகம் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கருப்பு உதவியாக இருக்கும் என்றும் தமிழார்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்