75வது சுதந்திர ஆண்டு விழாவையொட்டி...பார்க் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:28 IST)
இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்கள் சார்பாக பல்வேறு பயனுள்ள நிகழ்வுகள் நடந்து வருகிறது. 
 
அதன் ஒரு பகுதியாக, கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாம்  பரணி பள்ளி வளாகத்தில் 31ம் தேதி ஞாயிறுக்கிழமை, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து பொதுமக்கள், மாணவர்களுக்கு பயனுள்ள முறையில் சிறப்பாக நடைபெற்றது.
 
பள்ளியின் தாளாளர் திரு. மோகனரங்கன், செயளர் திருமதி. பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் திருமதி. சுபாசினி தலைமை வகித்தனர்.
 
பிஸ்ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரபு மற்றும் மருத்துவ குழுவினர் இருதய நல மருத்துவம், குழந்தைகள் நலம், பொது மருத்துவம், மகளிர் நலம், கண் நலம் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை நல அறுவை சிகிச்சை மருத்துவம், பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சை மருத்துவம், தோல் நல மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவம், கல்லீரல், கணையம், பித்தப்பை சிறப்பு மருத்துவ சிகிச்சை ஆலோசனை வழங்கினர். மேலும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை, இருதய ஸ்கேன், ஈஸிஜி, சர்க்கரை பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மருத்துவர்கள் பரிந்துரையின்படி இலவசமாக செய்து தரப்பட்டது.
 
75வது சுதந்திர ஆண்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் பரணி கல்விக் குழும மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பொதுமக்கள்  ஆகியோர் மொத்தம் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு பி.எஸ். ஜி. மருத்துவ கல்லூரியின் மருத்துவ நிபுணர்களை சந்தித்து பயனடைந்தனர் என பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர். சொ.ராமசுப்பிரமணியன் தெரிவித்தார்.
 
இம் மருத்துவ முகாமிற்கு பரணி பார்க் கல்வி குழுமம் சார்பில்கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து பரணி பார்க் பள்ளி வரை  அனைவருக்கும் இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்