43 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து -11 பேர் காயம்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (17:16 IST)
கோவையில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து பேருந்து தீப் பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து கர் நாடக மாநிலம் பெங்களூருக்கு 40 பயணிகளுடன் சென்ற ஆம்னி பேருந்து தீப் பிடித்து எரிந்துள்ளது.

கோவையில் இருந்து பெங்களூரூக்கு ஆம்னி பேருந்து ஒன்று நேற்றிரவு  சென்று கொண்டிருந்தது.

புதுச்சாம்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது, பேருந்தின் பின்புறம் புகை வந்துள்ளது. உடனே  ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு, பரிசோதனை செய்த எண்ணின்னார்.

அடுத்த சில நொடிகளில் பேருந்தில் திடீரென்று தீப் பிடித்து உள்ளுக்குள் பரவியது. பயணிகள் ஜன்னல் வழியே கீழே குதித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 30 நிமிடங்கள் போராடி தீயணை அணைத்தனர்.

பேருந்தில் பயணித்த ஓட்டுனர், நடத்துனர்  உள்ளிட்ட 44 பயணிகள் உயிர்தப்பினர். இதில்,11 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்