தஞ்சாவூரில் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி: அதிர்ச்சி தகவல்!

புதன், 22 டிசம்பர் 2021 (16:05 IST)
தமிழகத்தில் ஏற்கனவே ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது தஞ்சாவூரில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் இந்தியாவில் மொத்தம் 200க்கும் அதிகமானவர்களுக்கு ஒமிக்ரான் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த பெண் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தஞ்சாவூரில் உள்ள ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது
 
தஞ்சாவூர் மாவட்டம் திருமணங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த அந்த நபரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்