அடிக்கடி ...லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த போலீஸ்காரர்..

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (14:01 IST)
சேலத்தில் லாட்ஜில் பெண்ணுடன் உல்லாசம் இருந்த ஏட்டு, அலங்கோலமான உடையுடன் போலீஸாரிடம் சிக்கியதால் அவரை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரில் சில சமீபத்தில் 6 ஏட்டுகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் இருவர் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானதால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இதில் ஒரு ஏட்டு கொண்டாடலாம்பட்டியில் உள்ள லாட்ஜுக்குப் பெண்களை அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.
 
இதையடுத்து அங்குள்ள ஊழியர்களே போலிசாருக்குத் தகவல் அளித்தனர்.பின்னர் சேலம் நுண்ணறிவு பிரிவு போலிசார் இதுகுறித்து தகப்வ்பல் அடிப்படையில் நேற்று முன்தினம் அந்த லாட்ஜை முற்றுகையிட்டனர்.
 
இதையடுத்து அறைக்குள் சென்ற போலீஸார், அரைகுறை ஆடையுடன் இருந்த ஏட்டை கையும் களவுமாக பிடித்தனர். அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர்.
 
ஏட்டு அடிக்கடி லாட்ஜுகு பெண்களை கூட்டிவந்து உல்லாசம் அனுபவிப்பதாகப் புகார் வந்ததை அடுத்து தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
அதேபோல் மற்றொரு போலிஸார் காரருடைய மனைவி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். அதில் கணவர் வீட்டுக்கு வராமல் வேறொரு பெண்ணுடன் சகவாசம் வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.இதையடுத்து மற்றொரு காவலரும் இடம் மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் சேலம் போலீஸாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்