ஒடிசா ரயில் விபத்தில் மீட்கப்பட்ட தமிழர்களுக்கு சிறப்பு ரயில்.. இன்று காலை கிளம்பியது..!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (10:26 IST)
ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்தில் சுமார் 300 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் 900க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை அடுத்து இதில் ஏராளமான தமிழர்களும் பயணம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்த தமிழர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட  மற்றும் சிறு காயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கான சிறப்பு ரயில் இன்று காலை 8.45க்கு புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் நாளை காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்