சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட்: அதிரடி உத்தரவு..!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (15:51 IST)
கடலூர் அரசு மருத்துவமனையில் 12 வயது சிறுமி ஒருவர் சளி சிகிச்சைக்காக வந்திருந்த நிலையில் அவருக்கு செவிலியர் கவனக்குறைவாக நாய் கடி ஊசி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
நாய்க்கடி ஊசி போடப்பட்ட சிறுமி மயக்கம் அடைந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் தற்போது இது குறித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
கடலூர் அரசு மருத்துவமனையில் சலுகை சிகிச்சை வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலட்சியமாக ஊசி செலுத்திய செவிலியர் கண்ணகியை பணியிட நீக்கம் செய்து அரசு மருத்துவமனை இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்