ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு...

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (15:56 IST)
ஆசிரியர் தகுதித் தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஆசிரியர் தகுதிதேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

அதன்பின்,  இந்த தேர்வு தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த தேர்வு 15ஆம் தேதி வரை நடக்கும் என்றும் கணினி வழியில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 10 முதல் செம்டம்பர் 15 வரை நடக்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைப்படுவதக்ல ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவித்துள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்