டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா அதிமுகவினர்? ஸ்டாலின் விளாசல்

வியாழன், 5 அக்டோபர் 2017 (11:33 IST)
குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் தற்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா என்ற சந்தேகம் உள்ளது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கொசுவை கட்டுப்படுத்த விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
தமிழகத்தில் தினந்தோறும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு பல தரப்பினர் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு சார்பில் ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
பணம் எல்லாம் ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த பணம் எங்கே போகிறது? ஏற்கனவே குட்கா விற்கவே மாமூல் வாங்கியவர்கள் தற்போது டெங்கு பரவுவதற்கு மாமூல் வாங்குகிறார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கும், மக்களுக்கும் உள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்