நான் பிறப்பால் தான் பார்ப்பனன்; காவி என் மனதில் இல்லை: கமல் அதிரடி!

வியாழன், 5 அக்டோபர் 2017 (11:42 IST)
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசியல் குறித்து சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை கூறி வருகிறார். தமிழக அரசையும், அமைச்சர்களையும் விமர்சித்து வரும் கமல் விரைவில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார்.


 
 
இதுகுறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வரும் கமல் சமீபத்தில் பாஜக உடன் கூட்டணி வைப்பது குறித்து பேசிய கருத்துக்கள் அவரது ஆதரவாளர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. மேலும் தமிழக அரசை விமர்சிக்கும் கமல் மத்திய அரசை துளி அளவும் விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் கமல் பாஜக நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவரும் பிராமன சமூகத்தை சார்ந்தவர் தானே என பேசப்பட்டது.
 
இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ள கமல், நான் யார் என்றால் தமிழன், பிறப்பால் நீ பார்ப்பான் என்றால் அதனை நான் தெரிந்தெடுக்கவில்லை. மாறாக, பகுத்தறிவுதான் நான் தேர்ந்தெடுத்துள்ள அறிவுநிலை என்றும், என்னுள் எஞ்சி இருக்கும் காவி மனதில் இல்லை என அதிரடியாக கூறியுள்ளார்.
 
மேலும் எப்போதாவது வெற்றிலையைக் குதப்பினால் வாயில் இருக்கக் கூடும். அது சாதியம் மெச்சக்கூடிய புராதனக் கூட்டத்தின் கொள்கை விளக்கப் பிரகடனங்கள் மீது துப்புவதற்கு ஏதுவாக இருக்கும். நான் முதலமைச்சராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை அல்ல, ஆட்சி பலத்தை அசைக்கக்கூடிய அகற்றக்கூடிய செயல் எதுவோ அதுதான் என் ஆசை என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்