இந்தெந்த ஏரியாக்குதான் மழை... வட சென்னைக்கு நோ ரெயின்; வெதர்மென் ரிபோர்ட்!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (15:53 IST)
சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வெப்பம் தணியும் என தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 
 
இன்னும் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் 23 ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் குறைந்து மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையல் அறிவித்திருந்த நிலையில், சொன்ன தேதிக்கு முன்னரே சென்னையில் மழை துவங்கியுள்ளது. 
 
கத்திரி வெயில் துவங்கியதற்கு முன்னர் இருந்தே ஆட்டத்தை காட்டிய வெப்பம் தணிந்து இப்போது சென்னையின் சில பகுதியில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 
மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோவிலம்பாக்கம், தரமணி, குன்றத்தூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
இந்நிலையில் தமிழக வெதர்மேன் மழை குறித்து கூறியுள்ளதாவது, சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வெப்பம் தணியும். வட சென்னை பகுதிகளில் மழைக்கு பெய்ய வாய்ப்பில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் மழையை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்