காற்றின் மூலம் கொரோனா பரவுமா? முதல்வர் பழனிசாமி பேட்டி

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (18:45 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி சற்றுமுன் பேட்டி அளித்த நிலையில் அவர் கூறிய சில முக்கிய விபரங்களை தற்போது பார்ப்போம்
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது 
 
காற்றின் மூலம் கொரோனா பரவும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை 
 
ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ரேஷனில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை அளித்து வருகிறோம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளோம். மைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
 
கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் கொரோனா சமூக தொற்று ஏற்படவில்லை. நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம். சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. * நோய் பரவலை தடுக்க வேண்டும், வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே அரசு செயல்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்