லைசென்ஸ் இல்லையா? உங்களுக்கு ஆப்புதான்: போக்குவரத்து ஆணையர் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (12:58 IST)
ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு புதிய வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என வாகன விற்பனையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையர் தயானந்த் கட்டாரி உத்தரவிட்டுள்ளார்.


 

 
நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு கவணம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
 
இதைத்தொடர்ந்து விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலை, போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என போக்குவரத்து ஆணையர் தயானந்த கட்டாரி வலையுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அவர் வட்டார போக்குவரத்து மற்றும் சார்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அதில், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 9,231 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90% விபத்துக்கள் ஓட்டுநரின் கவணக்குறைவால் ஏற்படுகிறது. 
 
இதனைக் குறைக்க ஏற்கனவே உள்ள மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி விற்பனை செய்தால், விற்பனையாளர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்