முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா தான். ஜெயலலிதாவுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தவர் சசிகலா. சசிகலா தான் ஜெயலலிதாவின் வெற்றிக்கு காரணம் என கூறி வருகின்றனர் அதிமுகவினர். ஆனால் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என சசிகலா கூறிய நிகழ்வும் நடந்துள்ளது.
பெங்களூர் நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் குமரேசன் கூறியதாவது, ஜெயலலிதாவிற்க்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் தனி சசிகலா தனி. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்தது நட்பு மட்டுமே.
சாதாரண நட்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு சசிகலா தனது சொந்த வருமானத்தில் வாங்கிய சொத்துக்களை காரணம் காட்டி அவருடன் குற்றவாளியாக்க முடியாது. ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே முகவரியில் குடியிருந்தார்கள் என்பதற்காக அவருடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டினார் என சொல்வது சரியில்லை.
சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்னையும் ஜெயலலிதாவுடன் சேர்த்து குற்றவாளியாக்கி வழக்கு போட்டது அரசியல் காழபுணர்ச்சியில் திமுக செய்த சதி என சசிகலாவின் குரலாக அவரது வழக்கறிஞர் இப்படி கூறியிருக்கிறார்.