அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நிறைவு.. சென்னையில் அனுமதி மறுப்பு..!

Siva
ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (08:17 IST)
அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை இன்று நிறைவடையும் நிலையில்  வடமாநிலங்களில் கலவரம் நடந்ததை சுட்டிக்காட்டி சென்னையில் பாஜக யாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் சென்னை தங்கசாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு மட்டும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார் என்பதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்த இந்த யாத்திரை இன்று சென்னையில் நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இன்று வரை 198 தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை செய்த நிலையில் நேற்று உத்திரமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார்

இந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அண்ணாமலையின் பாதயாத்திரை சென்னையில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்

வட மாநிலங்களில் பாஜக நடத்தும் பேரணியில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் இந்த பேரணிக்கு அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் மீண்டும் போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவை போலீசார் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்