5 மணின்னு சொன்னாங்களே என்ன ஆச்சு? அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (06:16 IST)
நேற்று மாலை 5 மணிக்கு பாஜகவில் சில பிரபலங்கள் இணைய இருப்பதாக அண்ணாமலை கூறிய நிலையில் 5 மணி ஆகியும் யாரும் பாஜகவில் இணைய வரவில்லை என்பதை அடுத்து ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து 5 மணி ஆகி 5 மணி நேரம் ஆகியும் என்ன ஆச்சு இணைப்பு என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேட்டி அளித்த போது இன்று மாலை 5 மணி அளவில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளார் என்று தெரிவித்திருந்தார்

கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர்கள் யார் யார் இணைய போகிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்தனர்

ஆனால் இரவு 10 மணி ஆகியும் யாரும் வரவில்லை என்பதை அடுத்து நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாக பாஜகவினர் அறிவித்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்