யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

Prasanth K

செவ்வாய், 29 ஜூலை 2025 (09:39 IST)

தற்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்ட நிலையில் பிச்சைக்காரரும் அதற்கு ஏற்ப அப்டேட் ஆகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துவிட்ட நிலையில் சாலையோர கடைகள் தொடங்கி பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் வரை பல கடைகளிலும் க்யூ ஆர் கோடு வைக்கப்பட்டு அதன் மூலம் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் பலரும் கையில் காசு வைத்துக் கொள்ளாததால் பிச்சைக்காரர்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. அதை தொடர்ந்து திருப்பத்தூரில் பிச்சைக்காரர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் அப்பகுதியில் க்யூஆர் கோடு அட்டையை கையில் வைத்துக் கொண்டு பிச்சை எடுத்து வருகிறார். பிச்சையிட விருப்பம் இருப்பவர்கள் காசாகவோ அல்லது ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமோ பணம் அனுப்பலாம் என்ற அவரது இந்த முறை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்