வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:12 IST)
வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31ஆம் தேதி வேளாங்கண்ணியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பதும் வேளாங்கண்ணி கடற்கரையிலும் தேவாலயத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து இன்று இரவு புத்தாண்டையொட்டி வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருவதற்கும் கடற்கரையில் கூடி புத்தாண்டு கொண்டாடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
இந்த உத்தரவால் வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்