ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் மூவரும் திமுகவின் ‘பி’ டீம்: எடப்பாடி பழனிசாமி

Mahendran

வியாழன், 30 அக்டோபர் 2025 (15:46 IST)
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விவகாரம் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இந்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி ‘இந்தச் சந்திப்பு "தேவையற்றது" என்று கூறியதுடன், மூவரும் தி.மு.க.வின் 'பி டீம்' போல் செயல்படுவதாக காட்டமாகக் குற்றம் சாட்டினார். மேலும், இவர்களின் விலகல் காரணமாக அ.தி.மு.க. பலவீனமடையவில்லை; கட்சியில் இருந்து 'களைகள் அகற்றப்பட்டுள்ளன' என்றும் குறிப்பிட்டார்.
 
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, "எங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லை. ஏற்கனவே கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுவிட்டன" என்று அதிரடியாக பதிலளித்தார்.
 
அ.தி.மு.க.-வில் யார் துரோகம் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, ‘செங்கோட்டையனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் சூசகமாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பேசிய அவர், பீகார் விவகாரம் குறித்து தனக்கு தெரியாது என்றும் தமிழக விவகாரங்கள் குறித்து கேட்குமாறும் அறிவுறுத்தினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்