முடி காணிக்கைக்கு காசு கேட்டால் பணிநீக்கம்: அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:19 IST)
தமிழக கோயில்களில் முடிகாணிக்கைக்கு பணம் வசூலிக்க கூடாது என்றும் அவ்வாறு வசூலித்தால் பணம் கேட்பவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முடி காணிக்கை கட்டணம் கிடையாது என்றும் அதற்கு பதிலாக கோவில் நிர்வாகமே முடி எடுப்பவர்களுக்கு கட்டணம் வழங்கும் என்றும் அறிவித்திருந்தார்
 
இதனை அடுத்து கடந்த சில நாட்களாக முடி காணிக்கை கட்டணம் பெறுவதில்லை. ஆனால் ஒரு சிலர் கட்டணம் பக்தர்களிடம் கேட்டு வாங்குவதாக புகார்கள் வெளிவந்து கொண்டிருப்பதை அடுத்து முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் எந்தவிதமான கட்டணமும் கேட்கக் கூடாது என்றும் அவ்வாறு கேட்கும் பணியாளர்களை உடனடியாக நீக்கி அவர்களுக்கு பதிலாக வேறு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்