அனைத்து தொகுதிகளிலும் ஒரு அரசு கல்லூரி! – அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு!

புதன், 8 செப்டம்பர் 2021 (10:58 IST)
தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அரசு கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நடப்பு ஆண்டில் புதிதாக கட்டப்பட உள்ள கல்லூரிகள் குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக அறநிலையத்துறை சார்ப்பில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட கல்லூரிகளையும் சேர்த்து நடப்பு ஆண்டில் 21 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கட்டப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு ஒரு அரசுக் கல்லூரியாவது இருக்கும் வகையில் அனைத்து தொகுதிகளுக்கும் கல்லூரி வசதி செய்யப்படும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்