கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டுவந்தது என்பதும் பெட்ரோல் நூறு ரூபாயை கடந்தது என்பதும் டீசல் 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை
கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.49 எந்த விலையும் டீசல் விலை 94.39 என்ற நிலையிலும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்றும் பெட்ரோல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலை குறைந்து இருக்க வேண்டும் என்றும் ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது