பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க காரணம் என்ன? ப.சி. பதில்!!

வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (13:34 IST)
ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க காரணம் என்னவென தெரிவித்துள்ளார். 

 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து 19 நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. 
 
இதனிடையே ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க காரணம் என்னவென தெரிவித்துள்ளார். அதில் , பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 19 நாட்களாக மாற்றம் இல்லை. ஏனெனில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை மாதம் 19 ஆம் தேதி தொடங்கி, 18 நாட்கள் ஆகிறது.
 
பெகாசஸ் மென்பொருள் செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டுக்கொண்டு இருப்பதாலும் எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அனைத்து துறையின் தலைமை அதிகாரிகள் 15 ஆம் தேதி வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவையனைத்தின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்