அபிராமிக்கு ஜாமீன் கேட்க மாட்டோம்: பெற்றோர்கள் திட்டவட்டம்

சனி, 8 செப்டம்பர் 2018 (06:45 IST)
கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்த சென்னை குன்றத்தூர் அபிராமிக்கு ஜாமீன் கேட்க பொவதில்லை என்று அவருடைய பெற்றோர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

சென்னை குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக்கடை சுந்தரத்தின் மீது கொண்ட கள்ளக்காதலால்  4 வயது மகள் கார்னிகா மற்றும் 7 வயது மகன் அஜய் ஆகிய இருவரையும் கொலை செய்தார். பின்னர் கள்ளக்காதலனுடன் கேரளாவுக்கு ஓடிப்போக முயற்சிக்கும்போது நாகர்கோவிலில் அபிராமி கைது செய்யப்பட்டார்.

அபிராமியின் கொடூர செயலால் இரண்டு குழந்தைகளை ஒருபக்கம் கணவர் விஜய் தவித்து வரும் நிலையில் தனது மகளின் செயலால் வெளியே தலைகாட்ட முடியாமல் இன்னொரு பக்கம் அவருடைய பெற்றோர்களின் நிலை உள்ளது.

இந்த நிலையில் அபிராமிக்கு நிச்சயம் ஜாமீன் கேட்க போவது இல்லை என்றும், தனது பேரப்பிள்ளைகளை கொலை செய்த அவள் சிறையில் இருப்பதுதான் நியாயம் என்றும் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்