தமிழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படிக்க நீட் தேர்வு அவசியம் என்று கடந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைக்காமல் மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு முதல் பலியாக கடந்த ஆண்டு அரியலூர் அனிதா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் இந்த ஆண்டும் நீட் தேர்வு தோல்வியால் மாணவர்களின் தற்கொலை நீடித்து வந்த நிலையில் இன்று சென்னை, சேலையூரில் நீட் தேர்வு எழுதி சீட் கிடைக்காததால், தனியார் கல்லூரி மாணவி ஏஞ்சலின் ஸ்ருதி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வால் மேலும் ஒரு உயிரின் இழப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.