ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தை சேர்ந்தவர் ஷேக் மைதீன். இவர் அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர் ஒரு பெண்ணைப் பார்த்து அந்த பெண்ணின் போட்டோவை ஷேக் மைதீனிடம் காண்பித்துள்ளனர். போட்டோவை பார்த்த ஷேக் பெண் அழகாக இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 2 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சற்று நேரத்தில் ஷேக் மைதீன் தனது பெற்றோரிடம் சென்று அந்த பெண், போட்டோவில் பார்த்தது போல் அழகாக இல்லை என்றும், மேக்கப் போட்டு தம்மை ஏமாற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தனது நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறி வெளியே சென்ற ஷேக், தனது நண்பரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.