கடலூருக்கு மிக அருகில்… நெருங்கி வந்தது நிவர்! – சூறை காற்றால் மின்சாரம் நிறுத்தம்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (14:26 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ள நிலையில் கடலூருக்கு அருகே நெருங்கி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ என்ற கணக்கில் கரையை நோக்கி நகரந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நிவர் புயல் கடலூரிலிருந்து 180 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 190 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 250 கி.மீ தொலைவிலும் நெருங்கி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புயல் நெருங்கி வரும் நிலையில் பல மாவட்டங்களில் சூறைக்காற்றும், மழையும் வீச தொடங்கியுள்ளதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவில் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கடலூரின் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்