40 எம்பிக்கள் இருந்தும் அமைச்சரவையில் பூஜ்யம்! என்ன ஆகும் தமிழக நிலைமை!

Webdunia
வியாழன், 30 மே 2019 (22:37 IST)
தமிழகம், புதுவை ஆகியவற்றில் இருந்து 40 எம்பிக்கள் இருந்தும் மத்திய அமைச்சரவையில் ஒருவர் கூட இல்லாத்தால் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய பிரதிநிதியே இல்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது.
 
கடந்த முறையாவது பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றதால் அவருக்கு ஒரு இணை அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால் அவரும் இந்த முறை தோல்வி அடைந்துவிட்டார். ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்த எச்.வசந்தகுமாரை மக்கள் எம்பியாகியாக்கியுள்ளனர். தேவையில்லாமல் தற்போது நாங்குனேரி தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதுதான் ஒன்றுதான் மிச்சம்
 
மத்திய அமைச்சர் என்ற சக்திவாய்ந்த பதவியில் இருந்தால் மட்டுமே மாநிலத்திற்கு என நலத்திட்டங்களை கேட்டு பெற முடியும். தற்போது ஒருவர் கூட இல்லாததால் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. திமுக கூட்டணியின் 39 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் அமைச்சர்களாகியிருக்கும் நிர்மலா சீதாராமனும், ஜெய்சங்கரும் தமிழர்கள் என்ற ஆறுதல் மட்டும் நமக்கு உண்டு. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்