தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிக்கை

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (13:44 IST)
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்ன தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்