அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் மழை: வானிலை ஆய்வு மையம்

வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:07 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
 
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் மேகமூட்டமாக இருக்கும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை அமைந்தகரை மதுரவாயல் வண்டலூர் அம்பத்தூர் மாதவரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்