”மாணவர்களின் மனித கடவுளே” - கவனத்தை ஈர்த்த பேப்பர் விளம்பரம்!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (10:24 IST)
எங்கள் ஓட்டு உங்களுக்கு என எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்போதே வாக்களித்த அரியர் மாணவர்கள்
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
 
இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது இறுதி ஆண்டு பாடங்களின் மறுதேர்வை தவிர மற்ற செமஸ்டர் பாடங்களில் மறுதேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக உத்தரவிட்டார். 
 
காலம்காலமாக அரியர் எழுதி வரும் பலர் எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டி ஆரவாரம் செய்தது தெரிந்ததே. இதன் அடுத்த கட்டமாக நியூஸ் பேப்பரில் ஒரு பக்க அளவிற்கு ”மாணவர்களின் மனித கடவுளே” என போட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கே என தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு விளம்பரபடுத்தியுள்ளனர். இது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்