புது டெக்னிக்கா ? பளபள காரை விட்டு ...டயர்களை திருடிச் சென்ற கும்பல் !

செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:23 IST)
சென்னையில் காரை திருடுவதற்குப் பதிலாக காரின் டயரை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜெஜெ நகரில் உள்ள டிவிஎஸ் காலனியில் வசித்து வருபவர் மகேஷ்பாபு. இவர் சில வாரங்களுக்கு முன்னர் ஒரு மாருதி காரை வாங்கியூள்ளது. தனது வீட்டில் நிறுத்த முடியாமல் தன் உறவினர் வீட்டில் காரை நிறுத்தி வைத்துள்ளார் மகேஷ்பாபு.
 
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, தனது காரை நிறுத்திவிட்டு மீண்டும் நேற்று காரை எடுக்கச் சென்ற மகேஷ்பாபுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 
அங்கு, காரின் நான்கு டயர்களையும் திருடர்கள் திருடிச்சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து ஜெஜெ நகர் காவல்நிலையத்திற்குச் சென்று ஒரு புகார் மனு அளித்துள்ளார் மகேஷ்பாபு. இந்த சம்பவம் அப்பகுதி வாகிகளிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்