காரை விட்டுவிட்டு டயரை மட்டும் அபேஸ் செய்து போன விநோத திருடர்கள்

Arun Prasath

செவ்வாய், 1 அக்டோபர் 2019 (15:58 IST)
சென்னையில் காரை திருடாமல், கார் டயர்களை மட்டும் திருடிச்சென்ற வினோத திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமும் நாம் பல திருட்டு செய்திகளை கடந்து வந்திருப்போம். நகைகளை கொள்ளையடிப்பது, வீட்டிற்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிப்பது, சாலைகளில் பைக் கார்களை திருடுவது போன்ற கொள்ளைகளை பார்த்திருப்போம். ஆனால், சென்னை ஜெ.ஜெ.நகரில் ஒரு புதுவிதமான திருட்டு நடந்துள்ளது.

சென்னை ஜே.ஜே,நகர் டி.வி.எஸ் காலணியை சேர்ந்த மகேஷ்பாபு என்பவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு “மாருதி சியாஸ்” என்ற புது கார் ஒன்றை வாங்கினார். தினமும் காரில் அலுவலகத்துக்கு செல்லும், மகேஷ்பாபு, தனது வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் தன்னுடைய உறவினர் வீட்டு முன்பு காரை நிறுத்தி வைப்பார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காரை எடுக்கச் சென்றபோது அதிர்ந்து போனார். கார்களிலுள்ள 4 டயர்களையும் கழட்டி, வீல்களுக்கு பதிலாக கற்களை வைத்து அதில் காரை நிற்க செய்துள்ளனர்.

இதை கண்ட மகேஷ்பாபு, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட போலீஸார், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து வருகின்றனர்.

காரை திருடியிருந்தால் கூட ஆச்சரியப்பட மாட்டர்கள். ஆனால் கார் டயர்களை திருடிய கும்பலின் எண்ணத்தையும், மனநிலையையும் நினைத்து பார்க்க கொஞ்சம் ஆச்சரியமாகவும் வினோதமாகவும் தான் இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்