தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (19:52 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என தமிழக அரசும் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், காற்கறி, மளிகைக்கடை, இறைச்சிக்கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை செயல்பட்டுவந்த நேரம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. 
 
பெட்ரோல் பங்குகள், ATM, மருந்து கடைகள், தமிழ் மருந்து மற்றும் நாட்டு மருந்து கடைகள் எப்பொழுதும் போல இயங்கும். 
 
நடைபாதை காய்கறி கடைகள் சாலை ஓர் பூ கடைகள், போன்றவை நாளை முதல் தடை. 
 
திருமணம், இறுதி சடங்கு, போன்ற எந்த காரியங்களாக இருந்தாலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல EPass கட்டாயம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்