வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வழங்கிய ரூ.3 கோடி: நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின்!

வெள்ளி, 4 ஜூன் 2021 (21:55 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா  வைரஸ் பரவல் குறைந்து வருகிறது 
 
இந்த நிலையில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் நிதி உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக தொழிலதிபர்கள் தொழில் நிறுவனங்கள் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரின் நிதியுதவி செய்து வருகின்றனர் 
 
அது மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை ரூபாய் மூன்று கோடி தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதி வழங்கியுள்ளது
 
ஏற்கனவே இந்தப் பேரவை ரூபாய் 20 கோடிக்கு பொருட்கள் வழங்கியுள்ள நிலையில் தற்போது மேலும் 3 கோடி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நன்றி கூறி தனது டுவிட்டரில் முதல்வர் முகஸ்டாலின் கூறியதாவது
 
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை - அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் #Donate2TNCMPRF-க்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் நன்றி கூறினேன். காலத்தினாற் செய்த உதவியை தமிழ்நாடு மறவாது. தமிழ் போல் வாழ்க!
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்