நாகை - இலங்கை இடையே புதிய கப்பல் போக்குவரத்து கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுவரை வாரம் மூன்று நாட்கள் மட்டுமே நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை நடந்து வரும் நிலையில் இனி வாரத்திற்கு ஐந்து நாட்கள் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது. வரும் எட்டாம் தேதி முதல் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய ஐந்து நாட்களில் கப்பல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் www.sailindsri.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை - இலங்கை இடையிலான கப்பல் சேவைக்கு பயணிகளை வருகை அதிகரித்து வருவதை குறித்து கூடுதல் நாட்களில் கப்பலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில், தற்போது வாரத்திற்கு 5 நாட்கள் கப்பல் சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.