இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக இன்று திருவேற்காட்டில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அங்கு பிறந்த குழந்தை ஒன்றிற்கு பெயர் வைக்க பெற்றோர்கள் கேட்டபோது அந்த குழந்தை “சோழன்” என முதல்வர் பெயர் வைத்துள்ளார்.