ஏ.டி.எம் மிஷன்களில் ரூ.2000 நோட்டுகள் எப்போது கிடைக்கும்?

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2016 (16:18 IST)
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வாங்கக் கூட போதுமான 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் அல்லல் படுகின்றனர். தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை அடுத்து வங்ககளில் இன்று கூட்டம் அலைமோதியது. பலர் புதிய ரூபார் நோட்டுகளை வாங்க ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் வங்கியில் ரூ.4000 மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது புதிய 2000 ரூபாய் தாள் இரண்டு வழங்கப்பட்டது.


 
இந்நிலையில் ஏ.டி.எம் மிஷின்களில் நாளை முதல் பணபரிவர்த்தனை நடைபெற உள்ளது. இதில் புதிய ரூபாய் தாள்கள் இடம்பெறாது என்று தெரிகி்றது. இது குறித்து  மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தில்லியில் செய்தியாளகளிடம் விளக்கம் அளித்தார். அதில், ஏடிஎம் மின்ஷின்களில் சில மாற்றங்களை செய்ததால் மட்டுமே 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வரும். அதுவரை ரூ.100 நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறினார். 2000 ரூபாய் நோட்டுகள் வேண்டுமெனில் வங்கியில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஆனாலும் சில வங்கி ஏ.டி.எம்.களில் புதிய 2000 ரூபாய் தாள்களை நாளை முதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.
 
 
அடுத்த கட்டுரையில்