ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (18:58 IST)
பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில்  அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள ஆணைக்குடி கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த ராஜா. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அவரின் நண்பர் கராத்தே செல்வின் கொலைக்கு பழிவாங்கவே இவர் ரவுடியாக மாறினார் எனக் கூறப்படுகிறது. இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளது. கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தில் என பல வழக்குகள் நெல்லை மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில் நிலுவையில் உள்ளது.

ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு எதிரிகளை சுட்டுக்கொல்வதில் ராஜா கில்லாடிஎன்பதால் இவரை ராக்கெட் ராஜா என இவரின் ரவுடி நண்பர்கள் அழைத்து வருகின்றனர்.

ALSO READ: ஹரி நாடாரை கட்சியிலிருந்து நீக்கிய ராக்கெட் ராஜா

இந்த நிலையில்  சாமித்துரை என்பவரை  கொலை செய்த வழக்கில்ம் கடந்த 7 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா மீது தற்போது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில். பனங்காட்டுப்படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில்  அடைக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்