நெல்லையில் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடும் பொது மக்கள்!

வெள்ளி, 18 ஜூன் 2021 (16:34 IST)
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த சில தளர்வுகளை மக்கள் பொருட்படுத்தாமல் அதிகளவில் வாகனங்களில் வெளியே சுற்றி வருகிறார்கள். 
 
மார்க்கெட், கடை, டீ கடைகளிலும் மக்கள் கூட்டம் சாதாரண நாட்கள் போல விழிப்புணர்வுகள் இல்லாமல் இருக்கின்றனர். நெல்லை மக்கள் கொரோனா ஊரடங்கை சரியாக கடைபிடிக்காமல் சுற்றித்திருந்து வருகின்றனர்.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நெல்லையில் குறைந்த தொற்று மீண்டும் அதிகரிக்காமல் இருப்பது மக்கள் கையிலே உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்