சமீபத்தில் தசாவதாரம் படத்தின் 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதுகுறித்து சில பதிவுகளைப் பகிர்ந்திருந்தார் கமல்ஹாசன். அவரின் சமூகவலைதளப் பதிவில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்குனர்களுக்கு தசாவதாரம் ஒரு பிஹெச்டி என்றால் மைக்கேல் மதன காமராஜன் படம் ஒரு டிகிரி படிப்பு போன்றது… அந்த படத்தின் காட்சிகளை எப்படி படமாக்கினீர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டிருந்தார்.