கோபிநாத் என்னை ஏமாற்றிவிட்டார்: இளம்பெண்ணின் வீடியோ ஆதாரம்

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (14:22 IST)
பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், என்னை ஏமாற்றியது போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள் என இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத், தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அந்த இளபெண் கூறியதாவது:-
 
சில மாதங்களுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். என் படிப்பு செலவை தானே ஏற்பதாக கோபிநாத் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்று வரையிலும் எனக்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் எனது கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போய்விட்டது.
 
எனக்கு பணம் தராதது பிரச்சனையில்லை. கொடுக்கிறேன் என சொல்வதற்கே மனம் வேண்டும். ஆனால் வாக்குறுதி கொடுத்து என்னை ஏமாற்றியது போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள், என கூறியுள்ளார்.  
 

நன்றி: Fresh Facts
அடுத்த கட்டுரையில்