சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் தொல்லை ஏற்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பள்ளியின் முதல்வரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் வருத்தம் அளிக்கிறது என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இது குறித்து முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.