‛பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது’ - டாக்டர் ராமதாஸ்

திங்கள், 24 மே 2021 (14:09 IST)
சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் ஆன்லைன் வகுப்பு நடத்தும்போது மாணவிகளிடம் பாலியல் தொல்லை தரும் விதமாக நடந்து கொண்டதாக புகார் வெளிவந்துள்ளது
 
இது குறித்து மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து கடும் கண்டனங்கள் அந்த ஆசிரியருக்கு குவிந்து வருகிறது. குறிப்பாக கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதிமாறன் உள்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்
 
இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து கூறியிருப்பதாவது: 
சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
 
மாணவ, மாணவிகளுக்கு ஒழுங்கு பற்றி பாடம் நடத்தும் பள்ளிகள், தாய், தந்தையருக்கு அடுத்து கடவுளாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்  அதற்கேற்ற வகையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்; தவறு செய்தால் தண்டிக்க வேண்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்