1955ல் திருவள்ளுவர் படம்: ஸ்டாலின் என்ன சொல்லபோகிறார் என பாஜக பிரமுகர் கேள்வி

செவ்வாய், 12 நவம்பர் 2019 (07:59 IST)
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடித்து, அவரை இந்து மதத்தவராக மாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவரது திருக்குறளில் கடவுள் நம்பிக்கை குறித்த எந்த ஒரு குறளும் இல்லை என்றும், திருவள்ளுவர் ஒரு நாத்திகர் என்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் கூறிவந்தன. இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் தற்போது 1955 ஆம் ஆண்டில் கல்கி இதழின் அட்டைப்படத்தில் வெளியான திருவள்ளுவர் புகைப்படம் ஒன்றை பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் பதிவு செய்துள்ளார்
 
இதுகுறித்து அவர் கூறியபோது, ‘1955 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம்தேதி வெளியான கல்கி இதழில் திருவள்ளுவர் காவி உடையில், விபூதி பூசி, தாமரை மலர் அருகே உட்கார்ந்து இருப்பது போன்று உள்ளது. ஸ்டாலின் அவர்களே காவிமயம் மட்டுமல்ல, தாமரை மயமாகவும் திருவள்ளுவர் காட்சியளிக்கின்றார். இதற்கும் ஒரு கண்டனம் தெரிவித்து செய்யுங்கள் என்று நாராயணன் திருப்பதி அவர்கள் தெரிவித்துள்ளார்.நாராயணன் திருப்பதியின் இந்த டுவீட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பதில் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
மேலும் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்களே பதிவு செய்து வருகின்றனர். காவி உடை தரித்தவர் என்றால் திருவள்ளுவர் என்றால் இவரும் திருவள்ளுவர்தான் என பிரேமானந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு கிண்டலடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக டுவிட்டரில் திருவள்ளுவர் பிரச்சனை மறக்கட்ட நிலையில் தற்போது மீண்டும் நாராயணன் திருப்பதி அதனை மீண்டும் கிளப்பியுள்ளார்.

ஹா ஹா ஹா!1955ம் ஆண்டு ஜூன்5ம் தேதியிட்ட கல்கி இதழில் திருவள்ளுவர். ஸ்டாலின் அவர்களே, காவி மயம் மட்டுமல்ல, தாமரை மயமாக காட்சியளிக்கிறாரே திருவள்ளுவர். இதற்கும் ஒரு கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் செய்யுங்கள்.

நாராயணன் திருப்பதி. pic.twitter.com/vPbgz9pBs5

— Narayanan Thirupathy (@Narayanan3) November 11, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்