அமைச்சர்களாக இருக்கிற தாறுமாறுகள்: வச்சு செய்யும் நாஞ்சில் சம்பத்!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (18:39 IST)
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரன் பலம் வாய்ந்த அதிமுக, திமுக கட்சிகளை தோற்கடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
 
தொடர்ந்து பல பின்னடைவுகளை சந்தித்து வந்த தினகரன் தரப்புக்கு முதல் வெற்றியாக அமைந்தது ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றி. இந்த வெற்றி அந்த அணிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
 
இந்நிலையில் தினகரன் ஆதரவு நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார இதழின் இணைதளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் தற்போதை அதிமுக அமைச்சர்களை தாறுமாறு என விமர்சித்துள்ளார். தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் மூட்டைப்பூச்சி என விமர்சித்ததற்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு டிடிவி தினகரன்தான் என்று ஆர்கே நகர் மக்கள் முடிசூட்டிவிட்டார்கள். அவர் தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாகிவிட்டார். அமைச்சர்களாக இருக்கிற இந்த தாறுமாறுகள் ரூ.6000 கொடுத்த பிறகும் தினகரன் வாக்கிய ஓட்டில் பாதி ஓட்டைத்தான் வாங்கியிருக்கிறார்கள்.
 
ஆர்கே நகரில் டிடிவி தினகரனை நசுக்க முடியாதவர்கள், தேர்தலுக்கு பிறகு நசுங்கிப்போனார்கள். இப்போது, யாரோ நம்மை நசுக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பேசுகிற பேச்சை தமிழ்நாட்டில் எந்த முட்டாளும் நம்ப மாட்டான் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்